Disqus Shortname

உத்திரமேரூர் அருகே குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையம் திறப்பு விழா

உத்திரமேரூர் 07/02/2020 
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களும் திமுக சார்பில்  குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கிராம மக்களின் அடிப்படை  பிரச்சனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்  தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தில்  புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தேவை என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையின் பேரில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு 
நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி கிராமத்தின் மத்தியில் புதியதாக குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைக்க உத்தரவிட்டார். அப்பணியானது முடிவடைந்த நிலையில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையம் திறப்பு விழா  நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் நாகன், நகர செயலாளர் பாரிவள்ளல், கோபாலகிருஷ்ணன், விவசாய அணி ஏழுமலை, சசிகுமார், பிலோதாமஸ், வடிவேலு, தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையத்தினை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையத்தினை பார்வையிட்டார். இதேப் போல்
மானாம்பதி கண்டிகை கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுடுகாடு சிமெண்ட் சாலையினை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்  உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments