Disqus Shortname

உத்திரமேரூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்

உத்திரமேரூர்26/02/2020
உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இந்தியா டார்ன் பிங் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிசிலி
தலைமை தாங்கினார். இந்தியா டார்ன் பிங் நிறுவன தலைவர் அனந்தகுமார், செயலாளர் ரவூனக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் தனசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் டாக்டர் ரேகாநாயர் கலந்து கொண்டு பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்து விளக்கி பேசினர். இதில் அண்மை காலங்களாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இளம் பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், மேற்கத்திய உணவு முறை, தாமதமான திருமணம், தாமதமான கருத்தரிப்பு, மரபணு மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரமயமாக்கல் அதிகரிப்பு, உடல் பருமன், கொழுப்பு அதிகரிப்பு உள்ளிட்டவைகளே மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்களாக விளங்குகிறது. இதற்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். பெண்களுக்கு எந்த வித உடல் பாதிப்பு ஏறபட்டாலும் உடனடியாக மருத்துவரை அனுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் முழுஉடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவியர்களிடம் பட்டாங்குளம் கிராம வீதிகளில் பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட புற்றுநோய் சின்ன வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

No comments