Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67 வது பிறந்தநாள் விழாவையொட்டி 67 கிலோ பிரம்மாண்ட மெகா கேக் வெட்டிக் கொண்டாட்டம்.

உத்திரமேரூர் பிப். 27 
உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 67 வது பிறந்தநாள் விழாவையொட்டி 67 கிலோ அளவிலான பிரம்மாண்ட மெகா கேக் வெட்டிக் கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் மா.ஏழுமலை, காவனூர்புதுச்சேரி சுப்பையா, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சசிகுமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் ஒன்றிய அவைத் தலைவர்
மனோகரன் நகர செயலாளர் பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து
கொண்டு 67 கிலோ மெகா கேக்கிணை வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர் தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்ச் 1 தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கிளைக்கழகம் தோரும் கழகக் கொடியோற்றி இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. மார்ச் 4 தேதி உட்கட்சித் தேர்தல் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.