Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு பள்ளியில் பெற்றோர்கள் உதவியோடு 10 ஸ்மார்ட் கிளாஸ் ரூம்

உத்திரமேரூர் 14/02/2020
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மானாம்பதி, விசூர், கண்டிகை, ஆரோக்கியபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 934 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் உட்பட 38 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியானது 10 மற்றும் 12 ஆம் ஆண்டில்
கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பாடப்பிரிவு மட்டுமின்றி பள்ளி மாணவ-மாணவியர்கள் பல்வேறு தடகளப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியானது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் துவங்கி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏழை எளிய மாணவர்கள் பலர் பயின்று சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கற்பிக்கும் திறன் மேலும்
அதிகரித்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் அனைத்து  ணவர்களும்
பயன்பெறும் வகையில் பல லட்சம் மதிப்பீட்டில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 10 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம்க்கு
தேவையான அனைத்து தடவாளப் பொருட்களையும் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தானாக முன்வந்து அமைத்து  கொடுத்துள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி  தமிழ் புலவர்களை போற்றும் வகையில் அவர்களின் பெயரை ஒவ்வொறு வகுப்பறைக்கு வைத்துள்ளனர். இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில்
மாணவர்கள் பாடம் எடுக்க ஆசிரியர்கள் மாணவர்களோடு அமர்ந்திருந்தது பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாவில்
பெற்றோர்கள் மாணவ-மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

No comments