Disqus Shortname

உத்திரமேரூரில் விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்க அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம்

உத்திரமேரூர் 24/02/2020
உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்க அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில் உத்திரமேரூர் வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜாராம்பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், மோகன், வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோகிலா ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்  தங்கவேல் கலந்து கொண்டு பல்வேறு ஆலேசனைகளை வழங்கி
சிறப்புரையாற்றினார். இதில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதன் அவசியம், இந்த அட்டை பெருவதால் பிணையில்லாமல் கடனாக 1.60 லட்சம் வரை கடன் பெறலாம், முறையாக கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சுக் கொல்லிகள் வாங்க நிதிஉதவி பெற வழி வகுக்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கு கடன் பெறலாம் உள்ளிட்டவைகள் குறித்தும் இது குறித்து விவசாயிகளிடம் விளக்கி கூறி விவசாயிகள் பயன்பெற செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கிஸான் கிரடிட் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கப்பட்டது. முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சி
துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கு கலந்து கொண்டனர்.

No comments