Disqus Shortname

களியாம்பூண்டி கிராமத்தில் பாராமரிப்பு இல்லாமல் கிடக்கும் மகளிர் பொதுசுகாதார வளாகம்

உத்திரமேரூர்  30 டிச 2020
உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இதன் அருகிலேயே சமுதாய கூடம் அரசு பள்ளி மற்றும் கிளை நுலகமும் உள்ளது சமுதாய கூடத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிக்கு வருபவர்கள், அரசு பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் கிளை நுலகத்திற்கு அன்றாடம் வரும் பெண்கள் இந்த சுகாதார வாளாகத்தை பயன்படுத்தி வந்தனர் கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த சுகாதார வளாகம் கடந்த 7 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் செடி கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டி கிடப்பதால் விஷப்பூச்சுகள் நடமாட்டமும் காணப்படுகிறது. சுகாதார வளாகத்தில் உள்ள பைப்புகள் மற்றும் பீங்கான்
உபகரணங்கள் உடைந்து கிடப்பதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தற்போது தனிநபர் கழிப்பறை திட்டத்தில் கீழ் கிராமத்தில உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டப்பட்ட நிலையில் மகளிர் பொது சுகாதார வளாகத்தை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இதனால் சமுதாய நலக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் நூலகத்திற்கு வரும் பெண்கள் அவதிபடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் , பெண்களுக்காக கட்டப்பட்ட இந்த பொது சுகாதார வளாகம் எங்களுக்கு
மிகவும் பயனுள்ளதா  இருந்தது. நாளடைவில் இதை பராமரிக்காமல்
விட்டதால் பாழடைந்து கிடக்கிறது. வசதியானவர்கள் வீட்டில் கழிப்பிடம் கட்டிக்கொள்கின்றனர் இடவசதி உள்ளவர்கள் அரசின் மானியத்தில் கழிப்பிடம் கட்டிக்கொள்கின்றனர். எங்களை போன்ற ஏழைகள் திறந்த வெளியை நாடி செல்லும் நிலையில் இருக்கிறோம். எங்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் மகளிர் சுகாதார
வளாகத்தை சீரமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

No comments