Disqus Shortname

உத்திரமேரூர் அருகே 100 விவசாயிகளுக்கு பூச்சு கொல்லி மருந்து வழங்கும் விழா

உத்திரமேரூர்  19/02/2020
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் 100 விவசாயிகளுக்கு இயற்க்கை பூச்சுக் கொல்லி மருந்து வழங்கும் விழா நடந்தது. விழாவில் உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாக குழு இயக்குனர்கள் பரசுராமன், தாமஸ், வெங்கடேசன், விரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய வேளாண் நிறுவன திட்ட அலுவலர் அருண்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் முகமதுபீக் கலந்து கொண்டு மானாம்பதி கண்டிகை, காரணைமண்டபம், அரசாணிமங்கலம், இளநகர், மானாம்பதி, பெருநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகளுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சுக் கொல்லி மருந்து வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் பூச்சுகளிலிருந்து மணிலா பயிர்களை காத்துக் கொள்வது விவசாயிகள் கூடுதல் லாபத்திற்கு உளுந்து, காய்கறிகள் உள்ளிட்டவைகள் பயிரிடும் முறைகள் குறித்து விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் தேசிய வேளாண் நிறுவன ஒருங்கிணைப்பாளர்
கோபால் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments