Disqus Shortname

உத்தரமேரூரில் பால் உற்பத்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

உத்தரமேரூர் நவ,30
உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் சனிக்கிழமையன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உத்தரமேரூர் கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.என்.சந்திரன் தலைமை தாங்கினார். செய்யூர் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் எஸ்.ரவி முன்னிலை வகித்தார் .சென்னை பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் எம்.சங்கர், உத்தரமேரூர் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் வி.பெருமாள் விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் சொ.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜம்பு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காக்கநல்லுார் சி.ஏழுமலை, மன்னன்குடிசை ஜெகதீசன், ஒழுகரை எம்.எட்டியப்பன், மருதம் அங்கமுத்து, கருவேப்பம்பூண்டி கஜபதி, தாண்டவராயன் பிள்ளை, ஆறுமுகம் ஆகியோர் கோமாரி என்னும் கொள்ளை நோயிலிருந்து கால்நடைகளை  காப்பாற்ற போர் கால நடவடிக்கை எடுக்கும் படியும் இதுவரை இறந்த கால நடைகளுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், ஆடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணத்தொகையாக வழங்கும் படி தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள்.

No comments