Disqus Shortname

உத்திரமேரூர் கால்நடை சந்தைக்கு தடை

காஞ்சிபுரம்,நவ,28
கோமாரி நோயை தடுப்பதற்காக கால்நடை சந்தையை 30 நாட்கள் நிறுத்தி வைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. இந்நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க பிற மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும் கால்நடைகளை தடுக்க வேண்டும்.
மேலும் கால்நடை நோய் சட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரம்பாக்கம், வாலாஜாபாத், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், மானாமதி, பல்லாவரம், அணைகட்டு ஆகிய 6 இடங்களில் கூடும் கால்நடை சந்தையை 30 நாட்கள் நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments