Disqus Shortname

உத்திரமேரூரில் புதிய மின் இணைப்பு: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தொல்லியில் துறை கடிதம் எழுதியும் தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய தொல்லியல் துறையின் 2010ம் ஆண்டு மக்கள் விரோத சட்டத் தால், திருப்போரூர், மாமல்லபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம் பகுதியில் வாழும் மக்கள் புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அதில் மதிமுகவும் பங்கேற்றது. பின்னர் மதிமுக நிர்வாகிகள் போராட்ட குழுவினருடன் டெல்லி சென்று மத்திய தொல்லி யல் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.அப்போது, பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் கடந்த ஆகஸ்ட் 28ம்தேதி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான ஆட்சேபனையை விலக்கி கொள்வதாக தொல்லியல் துறை அறிவித்தது.

தொடர்ந்து 2.9.2013 அன்று தமிழ்நாடு பேரூராட்சி இயக்குனருக்கும், 23.9.2013 அன்று தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மத்திய அரசின் தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளருக்கும் கடிதம் எழுதி உள்ளதை மக்கள் வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு தங்கள் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

தொல்லியல் துறையின் தென்மண்டலக் கண்காணிப்பாளர் திருப்போரூர் உதவி மின் பொறி யாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆனால் மக்கள் போராடிப் பெற்ற வெற்றியைத் தடுக்கின்ற விதத்தில், மத்திய அரசின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால், இரண்டு மாதங்கள் ஆகியும் புதிய மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளரின் நடைமுறை கடிதத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து, புதிய மின் இணைப்பு வழங்கிட, தமிழக அரசு ஆவன செய்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments