Disqus Shortname

உத்திரமேரூர் எம்.எல்.ஏ மகன் திருமண வரவேற்பு: முதல்வர் நேரில் வாழ்த்து வழங்கினார்

  சென்னை, நவ.9 -
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெய்குமார், கே.பி.கந்தன், வாலாஜாபாத்.பா.கணேசன் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த துரைசிங்கம் ஆகியோர்களின் இல்லத்திருமண வரவேற்பு நடைபெற்றது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண வரவேற்பு 

ராயபுரம் தொகுதி சட்டம ன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார்_ ஜெ.ஜெயக்குமாரி ஆகியோரின் இளைய மகன் டாக்ட ர் ஜெ.ஜெயவர்தன் . இவர் எம்.டி.படித்து வருகிறார். தஞ்சா வூரை சேர்ந்த டாக்டர் டி . ராஜ்குமார் _ ஆ ர் .காஞ்சனா ஆகியோரின் மகள் டாக்ட ர் ஸ்வர்ணலெட் சுமி. ஜெயவர்தன் _ ஸ்வர்ணலெட் சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந் திரா மெ டிக்க ல் சென்டரில் நேற்று மாலை நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் சந்திரா கந்தன் ஆகியோரின்  மகள் இந்துமதிக்கும், டாக்டர்.பாரத்குமார் மங்களாம்பிகை தம்பதிகளின் மகன் சிவராஜூக்கும் திருமணம் நேற்று முன்தினம் இதே
இடத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி இங்கேயே நடைபெற்றது.
உத்திரமேரூர் எம்.எல்.ஏவும், காஞ்சிபுர மாவட்ட செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன், மேற்கு மாவட்ட செயலாளர் டபங்யூ.பி.ஜி.சரவணன், டி.லோகேஷ்வரி என்கிற லேகா மணமக்களின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த துரைசிங்கத்தின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழிநெடியிலும் உற்சாக வரவேற்புகள் அளித்தனர். வரவேற்பு பதகைகளும், தோரணங்களும் வண்ணவிளக்குகளாலும், வழிநெடுகிலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஜெயலலிதா வாழ்த்து

ஜெயவர்த்தன்–ஸ்வர்ணலட்சுமி, இந்துமதி–சிவராஜ், சரவணன்–லோகேஸ்வரி, சுந்தரேசன்–திவ்யா ஆகிய 4 பேரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாலை 4.50 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தனித்தனியாக அவர் மாலை எடுத்துக்கொடுத்து மாற்றிக்கொள்ள கூறினார். மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டதும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கினர். மணமக்கள் மீது அச்சதை தூவி வாழ்த்திய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘‘16–ம் பெற்று பெருவாழ்வு வாழ்க’’ என்று வாழ்த்தினார்.

திருமண பரிசு

தொடர்ந்து, ஜெயலலிதாவுடன் நின்று மணமக்கள் குடும்பத்தினர் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மணமக்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா திருமண பரிசையும் வழங்கினார். அதன்பின்னர், ஜெயலலிதா விழா மேடையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ப.வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


No comments