Disqus Shortname

உத்திரமேரூரில் மழை… வேகமாக வீசும் காற்று… இயல்புவாழ்க்கை பாதிப்பு

உத்திரமேரூர், நவ. 16–:
 வங்க கடலில் புயல் சின்னம் நீடிப்பதையொட்டி உத்திரமேரூரில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் நாகப்பட்டித்தில் இருந்து 370 கி.மீ. தொலைவில் இருந்த புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கி வருகிறது. தற்போது 180 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

உத்திரமேரூரில்  நேற்று காலை முதல் குளிர் காற்று வீசியது. மாலை நேரத்தில் தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலை முதல் விட்டு விட்டு மழை கொட்டி வருகிறது. உத்திரமேரூரின் புறநகரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது  உத்திரமேரூரில்  தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மழையோடு பலத்த காற்றும் வீசுவதால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல்காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை அப்புறப்படுத்த பேரூராட்சி தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments