Disqus Shortname

பயன்படுத்த முடியாத அரும்புலியூர் கிராம சாலை

உத்தரமேரூர் நவ,19:
 அருங்குன்றம் கிராமத்தில் இருந்து, கரும்பாக்கம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடல் பகுதியில் இருந்து, சாலவாக்கம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில், அருங்குன்றம் கிராமத்தில் இருந்து பிரிந்து, கரும்பாக்கம் வரை செல்லும், 5 கி.மீ., வரையிலான தார் சாலை உள்ளது. 3 கி.மீ.,க்கு பழுது
கரும்பாக்கம், அரும்புலியூர், சீதாவரம், பழவேரி உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இச்சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், சீதாவரம் முதல் கரும்பாக்கம் வரையிலான, 3 கி.மீ., சாலை பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், இச்சாலையின் வழியாக, காஞ்சிபுரத்திற்கு இயக்கபடும், டி55ஏ அரும்புலியூர், மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும், 129பி, 540 ஆகிய அரசு பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேர முடியாத நிலை உள்ளது. சாலையில் பள்ளங்கள் நிறைந்துள்ளன, இச்சாலையில் உள்ள பள்ளங்களில், மழைக் காலத்தின் போது, தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் இருந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, மிதி வண்டிகளில் செல்லும் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அரும்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கெங்கா கூறியதாவது: சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் நடந்தும், மிதி வண்டிகளிலும், செல்கின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல், சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments