Disqus Shortname

விடியற்காலை 4 மணிக்கு மேல்மருத்துாரிலிருந்து மதுராந்தகம் செங்கல்பட்டுக்கு நகர பேரூந்து தேவை!

உத்தரமேரூர் நவ,28
மேல்மருத்துாரில் இருந்து மதுராந்தகம் செல்லவும், படாளம் புக்கத்துரை வழியாக செங்கல்பட்டு செல்வதற்க்கும் விடியற்காலை 4 மணிக்கு  நகர பேரூந்து தேவை என உத்தரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவரும் சோழா அரிமா சங்க இணைச்செயலாளர்  செயலாளருமான கோ.சந்தானகிருஷ்ணன்   கோரிக்கை விடுத்துள்ளனர்.மேல் மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி மாலை அணிந்து வருகின்றனர். மேலும் பல ஊர்களில் இருந்து விரைவு பேரூந்தில் பக்தர்கள் மேல்மருத்துார் வருகின்றனர். குறிப்பாக 27 ம் தேதியன்று  திருச்சியில் இருநது உத்தரமேரூர் செல்ல அரசு விரைவு பேரூந்தில் புறப்பட்டு நடு இரவு 2.25 மணிக்கு மேல்மருவத்துார் வந்தேன். ஆனால் மருவத்துாரில் இருந்து மதுராந்தகம் செல்லவும், புக்கத்துரை கூட்ரோடு  வழியாக செங்கல்பட்டுக்கு நகர பேரூந்து வசதி கிடையாது ஆட்டோ, ஷேர் ஆட்டோ கிடையாது, விரைவு பேரூந்து வசதியால் ஊரின் உள்ளே செல்ல முடியவில்லை 4.45 மணிக்கு தடம் எண் 77 பேரூந்து வந்தது. இதனால் 2 1/4 மணி நேரம் பேரூந்து  நிலையத்தில் காத்திருக்க  வேண்டிய நிலை ஏற்பட்டது, விரைவு பேரூந்துகள் பைபாசில் இறங்கி நடந்து செல்ல சொல்கின்றனர் நடத்துனர்கள், ஆகவே மேல்மருவத்துாரில் இருந்து மதுராந்தகம் செங்கல்பட்டுககு உள்ளே செல்லும் அரசு பேரூந்துகளை இயக்க வேண்டும் என்று உத்தரமேரூர் கோ.சந்தானகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

No comments