Disqus Shortname

ஏற்காடு மலைக்கிராமத்தில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் நவ.21 - 
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் எம்.எல்.ஏக்கள் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 4 ம் தேதி நடைபெறவுள்ளது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் மனைவி இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாகவும், கடைகளிலும் காப்பி தோட்ட தொழிலாளர்களிடமும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் சேர்வராயன் மலைப்பகுதியில் மொத்தம் 67 கிராமங்கள் உள்ளன. மேலும் பட்டிப்பாடி, நாகலூர், மஞ்சகுட்டை, வெள்ளக்கடை, மாரமங்கலம், தலைச்சோலை, செம்மாநத்தம், குண்டூர் உள்ளிட்ட 9 பஞ்சாயத்துகள் உள்ளனர். இந்த மலைக்கிராமத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் அதிகப்படியான மக்கள் காப்பி தோட்ட தொழில் செய்து வருகிறார்கள்  அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள்  காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா. பெருமாள், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளரும் பழங்குடியினர் மாநில நலக்குழு உறுப்பினருமான அத்திவாக்கம் செ.ரமேஷ், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தென்னேறி என்.எம்.வரதராஜுலு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என்.ஆர். பழனி, நிர்வாகிகள் எழிச்சூர் ராமச்சந்திரன், கே.பிரகாஷ்பாபு, எஸ்.எம்.எஸ். செல்வம், ஜெய்சங்கர், கருணாகரன், பீரோகோபி, இராமச்சந்திரன், பொன்னம்பலம், ஏழுமலை, பாபு, மற்றும்  ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.முரளி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கழக துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் பாலு, ஏற்காடு 4 வது வார்டு கவுன்சிலர் சிவா, தோட்டப்பகுதியில் சென்று அ.தி.மு.க வேட்பாளர் பெ.சரோஜாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறினர்.
நேற்று காலை  ஏற்காடு, டவுன், மேல் அழகாபுரம், பஸ் ஸ்டேண்ட், காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள், பயணிகள் வியாபாரிகள் ஆகியோரிடமும் வாக்கு சேகரித்தனர்.

No comments