Disqus Shortname

மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்: பள்ளி நேரத்தில் தடை செய்ய கோரிக்கை

உத்திரமேரூர்  நவம்பர் 03,:
 உத்திரமேரூர் சாலை வழியாக மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை, பள்ளி நேரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்திரமேரூர் அடுத்துள்ள வல்லிமேடு கிராமத்தில், மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மணல் ஏற்றி செல்லும் வாகனங்கள், உத்திரமேரூர் வழியாக செல்கின்றன. இதனால், உத்திரமேரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டு மாணவ, மாணவியர் அவதிபட்டு வருகின்றனர்.லாரிகளை தடை செய்ய இந்திய மாணவர் சங்கம் சார்பில், சங்க வட்ட செயலர் சுந்தர், உத்திரமேரூர் உதவி ஆய்வாளரிடத்தில், புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனம் பகுதியில், அரசு உயர்நிலைப் பள்ளியும், உத்திரமேரூர் பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலை மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், அரசு கலைக்கல்லுாரி ஒன்றும் உள்ளன. இதே போன்று, உத்திரமேரூர் புக்கத்துறை சாலையில் வாடாநல்லுார் பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து, மணல் ஏற்றிச்செல்லும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், உத்திரமேரூர் சாலை வழியாக செல்கின்றன. இதனால் போக்குவரத்து, நெரிசலால் திணறி வருகிறது. மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால், விபத்து அபாயமும் உள்ளது.எனவே, பள்ளி சென்று வரும் நேரங்களில், காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரையிலும், உத்திரமேரூர் பகுதி சாலைகளில், மணல் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

No comments