Disqus Shortname

உத்தரமேரூரில் இலவச சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு முகாம்

உத்தரமேரூர் நவ,24 
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கமும், காஞ்சிபுரம் ஏனாத்துார் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை  மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து சனிக்கிழமையன்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச சர்க்கரை நோய் கண்டு பிடிப்பு முகாம் நடந்தது. அரிமா சங்க தலைவர்  கோ.காளிதாஸ் தலைமை தாங்கினார். சாசனத்தலைவர் டாக்டர். சி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் தே.வீராசாமி வரவேற்றார். காஞ்சி மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் மருத்துவ பதிவேடு அலுவலர்  எச்.வெங்கடேசன் மற்றும் விக்ரம், சினீஷா, மற்றும் உத்தரமேரூர் அரிமா சங்க மருத்துவர்கள் டாக்டர் கே.பரமசிவம். வி.மொஹமது மொஹதீன்  உட்பட 397 பயனாளிகளுக்கு சர்க்கரை நோய், கண், காது, மூக்கு, தொண்டை, இரத்த கொதிப்பு நோய்கள் ஆகியவற்றை இலவசமாக பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் அளித்தனர். கண் ஆப்ரேஷன் செய்து கொள்பவர்கள் காஞ்சி மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவ்விழாவில் உத்தரமேரூர் மீனாட்சி  பாலிடெக்னிக் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெ.இராஜேந்திரன் அரிமா சங்க நிர்வாகிகள் எல்.ஐசி. புகழேந்தி, அரிமா ஊக்குனர் எம்.சாம்பசிவம், துணைச்செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன. ஜி.சி.ஆரோக்கியசாமி கே.சந்திரன். பி.பாரஸ்மல். எம்.கே.ஆனந்தன்.எஸ்.சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் அரசு வழக்கறிஞர்
எம்.மணி நன்றி  கூறினார். 

No comments