Disqus Shortname

பொற்பந்தல் கிராமத்தில் நூலக கட்டிடம் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை


உத்திரமேரூர் நவ,30
உத்திரமேரூர் அடுத்த பொற்பந்தல் கிராமத்தில் 2007-08 ஆம் ஆண்டு அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கிழ் புதிய நூலகக்கட்டிடம் கட்டப்பட்டது.
இக்கட்டிடம் ரூ.2.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டடுள்ளது. இந்நூலகத்தின்
மாணவ-மாணவியர்களுக்கு தேவையான புத்தகங்கள் தவிர விலை உயர்ந்த மற்றும் அரிய வகை புத்தகங்கள் உள்ளது.
இந்நூலகம் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் திறக்கப்படும்
நூலகத்திற்க்கு, கிராமத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்
மற்றும் பொது மக்கள் தினமும் வந்துச்செல்கின்றனர்.
நூலகக்கட்டிடத்தின் மேற்கூரை சிதலமடைந்து காணப்படுவதால் அண்மையில் பொய்த
மழையில் சிதலமடைந்த பகுதியின் வழியாக நூலகத்தினுல் தண்ணீர் புகுந்து
நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள் நனைந்தும் வீணாகிறது. மேலும் நூலக
முழுவதும் மழை காலங்களில்  தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதாக
பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் நூலகத்திற்க்கு
செல்லமுடியாமல் மாணவ-மாணவியர்களும் பொதுமக்களும்
சிரமத்திற்க்குள்ளாகின்றனர்.  எனவே நூலகத்தை சீரமைத்து தர அப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




No comments