Disqus Shortname

பெருநகரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் டிச,09
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் ஊராட்சியில்  பாரத சுகாதார
திட்டத்தின் கீழ் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு பேரணி அரசினர்
மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 2019-க்குள் தூய்மையான இந்தியாவை
உருவாக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி ஆணைக்கிணங்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார். மேலும் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் பாரத சுகாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளி மற்றும் பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து முழு சுகாதார தமிழகமாக மாற்றும் நோக்கத்தில் ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருகளிளும் பேரணி சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் 2015-க்குள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத தமிழகமாக மாற்ற அனைவரும் தனி நபர் இல்ல கழிவறையை கட்ட வேண்டும், சுத்தமான சுற்றுபுரத்தில் வசிக்க வேண்டும், தன் சுத்தம் கடைபிடிக்க வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பினர். இப்பேரணியில் 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் நன்றி கூறினார்.

No comments