Disqus Shortname

திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளராக க.சுந்தர் தேர்வு உத்திரமேரூரில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உத்திரமேருர் டிச,27
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக உத்திரமேரூர் முன்னாள் எம்.எல்.
வும் மாவட்ட அவை தலைவருமான .சுந்தர் போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டுள்ளார். நேற்று உத்திரமேரூர் திமுக கழக நிர்வாகிகளுடன் பஜார் வீதி வழியாக சென்று உத்திரமேரூரில் உள்ள அறிஞர் அண்ணா,அம்பேத்கர், தந்தைபெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து திமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன்மாவட்டசெயற்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாயணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, நகர செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் பேரூராட்சி தலைவர்சுமதி குணசேகர், கவுன்சிலர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் ரமேஷ்பாபு, உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments