Disqus Shortname

குடேனாக மாறிய மானாம்பதி நூலகம்

உத்திரமேரூர் டிச,15
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி ஊராட்சியில் 2010-11 ஆம் ஆண்டு அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கிழ் புதிய நூலகக்கட்டிடம் கட்டப்பட்டது.
இக்கட்டிடம் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதாகும்.  இந்நூலகம்
மானாம்பதி பகுதி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள நரிக்குறவர்கள்
ஏராளமானோர் பயன் பெரும் வகையில் கட்டப்பட்டது. இந்த நூலகமானது ஊராட்சி
நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு
2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு
சில மாதங்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் திறக்கப்பட்டது. அதன் பின்
இந்த நூலகம் பூட்டியே காணப்பட்டது. தற்போது நூலகத்திற்கு பின்புறம்
ஊராட்சிக்கு சொந்தமாக இடத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கான புதிய கட்டிடம்
கட்டி வருகின்றனர். இந்த கட்டிடத்திற்கு தேவையான சிமென்ட், கம்பி
உள்ளிட்ட கட்டுமான  பொருட்களை வைக்க இந்த நூலகதை  தற்போது குடோனாக
பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த நூலகத்திற்க்கான ஒதுக்கப்பட்ட
புத்தகங்கள் இருக்கும் இடம் தெரியவில்லை, உள்ளே வைக்கப்பட்டுள்ள புத்தக
அலமாறிகள் பழாகி வருகிறன்றது.  எனவே நூலகத்தின் உள்ளே இருக்கும் கட்டுமான
பொருட்களை அகற்றிவிட்டு நூலக கட்டிடத்தை நூலகத்திற்க்காக மட்டும்
பயன்படுத்த வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments