Disqus Shortname

சாத்தனஞ்சேரியில் சிறப்பு மருத்துவ முகாம்

உத்திரமேரூர் டிச,13
உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் நேற்று சிறப்பு மருத்துவ
முகாம் நடைபெற்றது. சாத்தனஞ்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் இல.வேணு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். மானாம்பதி சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி வரவேற்றார். உத்திரமேரூர்  சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில் சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி, அரும்புலியூர், கரும்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1225 பேர் சிகிச்சை பெற்றனர். தனியார் மருததுவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம் உட்பட பல்வேறு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். இம்முகாமில் 47 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்கு உரிய மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஊராட்சி மன்ற தலைவர் அக்ரி நாகராஜன், துணைச்
சேர்மென் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments