Disqus Shortname

உத்திரமேரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிரடி பறிமுதல்

உத்திரமேரூர், டிச.3

உத்திரமேரூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்க கூடாது என்று பலமுறை விழிப்புணர்வு பிரசார மூலமும், கூறியும் மீண்டும் விற்கப்படுவதாக பேரூராட்சி அலுவலகத்துக்கு புகார் வந்தன. அதன் பேரில் பேரூராட்சி நிர்வாகத்தினரும், மாசு கட்டுப்பாடு வாரியத்தினரும் இணைந்து உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள ஓட்டல்கள், இனிப்புபலகார கடைகள், வணிக வளாககங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென ஆய்வு செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களை பேரூராட்சி செயல் அலுவலர் த.ந.கமல்ராஜ் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஆர்.செந்தில்நாதன் மற்றும் ஆய்வாளர் சி.ரகுபதி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் விதி முறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைகாரர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. பேரூராட்சி  துணைத்தலைவர் இ.தயாளன், 5.வது வார்டு உறுப்பினர் சர்தார்கான் உட்பட உழியர்கள்  உடனிருந்தனர்.  ஜனவரி மாதம் முதல் எந்த கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க்கக்கூடாது என்றார் செயல் அலுவலர் த.ந. கமல்ராஜ் உத்தரவிட்டார்.

No comments