Disqus Shortname

பள்ளியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

உத்திரமேரூர் நவ, 05
உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம், வினோபாநகர் கிராமங்கள் உள்ளன. இங்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் வினோபாநகரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் சுமார் 40 திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் உள்ளனர். இதில் பெருமபாலானோர் இருளர் இன மக்கள் ஆவர். இங்கு தொடக்கப் பள்ளி இல்லாததால் 3 கிமீ தொலைவில் உள்ள மல்லியங்கரணை அரசு உதவி பெரும் பள்ளி அல்லது வாடாநல்லூர் அரசுப் பள்ளிக்கு சென்று பயில வேண்டிய நிலை உள்ளது. மல்லியங்கரணை பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பள்ளி செல்ல வேண்டுமானால் உத்திரமேரூர் சென்னை சாலையை கடந்து செல்ல
வேண்டும் இவ்வாறு சாலையை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படும்
அபாயத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். வாடாநல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கு பஸ்சில் பயணம் செய்து குழந்தைகள் பயிலும் அவல நிலை உள்ளது. மேலும் இங்குள்ள பழங்குடியின மக்கள் வெகுதூரம் சென்று
கொள்ளாமல் இருக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அரசு
அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பட்டடாங்குளம் பகுதிக்கு தொடக்கப்பள்ளி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பயில்வதற்கு தங்களது குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உருவாகும் சூழல் உள்ளது. குழந்தைகளின் அடிப்படை கல்வியான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான கல்வி கூட இவர்களுக்கு எட்டாகனியாக உள்ளது. மேலும் இருளர் இன மக்கள் வாழவாதரம் உயர்திட அரசு பல்வேறு சலுகைகள் அளித்தப்போதிலும் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன்? பொது மக்கள் கேல்வி எழுப்பியுள்ளனர்.1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 25 மாணவ-மாணவியர்கள் இருந்தால் அவர்களுக்கு 1கிமீ குள் ஒரு பள்ளி அமைத்திட வேண்டும் என தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் 3கிமீ தொலைவில் சுமார் 40 திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் சென்று பயில் வதை அரசு அதிகாரிகள் கண்டு

No comments