Disqus Shortname

உத்திரமேரூரில் அம்மா மருந்தகம் துவக்கம்

உத்திரமேரூர் டிச,01
தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றானது அம்மா மருந்தகம். இங்கு அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் 10 சதவீத தள்ளுபடி விலையில் பொது மக்களுக்கு கிடைத்திட பல்வேறு இடங்களில் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 'அம்மா' மருந்தகம், உத்திரமேரூர் நகரில், பஞ்சாங்கய்யர் தெருவில் உள்ள கூட்டுறவு வங்கி கட்டடத்தின் ஒரு பகுதியில் திங்கட்கிழமையன்று திறப்பு விழா  நடைபெற்றது..  இதில் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் ஏ.லட்சுமணன் அனைவரையும் வரவேற்றார். உத்திரமேரூர் சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் துணைச் சேர்மென் அ.ரவிசங்கர் ஒன்றிய செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு அம்மா மருந்தகத்தை குத்துவிளக்கேற்றி 'அம்மா' மருந்தகத்தின், முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''தனியார் மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான மருந்து மற்றும் மாத்திரைகளும், இங்கே 10 சதவீதம் குறைவான விலைக்கு கிடைக்கும். தரமான முறையில், குறைவான விலையில் அரசு வழங்கும் மருந்து, மாத்திரைகளை பகுதிவாசிகள் வாங்கி, பயனடைய வேண்டும்,'' என்றார்.மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜீலு, பொ.சசிகுமார், கா.ஜெயவிஷ்ணு, இ.தயாளன், மேனலூர் வேலாயுதம், உமாபதி மண்டல இணைப் பதிவாளர் ஏ.இராமச்சந்திரன், துணைப் பதிவாளர் ஸ்ரீதரன், பொது வினியோக திட்ட துணைப் பதிவாளர் சிவக்குமார், களஅலுவலர் நாகராஜன், கூட்டுறவு பண்டகசாலை ஆராமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments