Disqus Shortname

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம்

உத்திரமேரூர் டிச,20
உத்திரமேரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  மகளிர் சுய உதவி
குழுக்களுக்கான இரண்டாம் கட்ட நுகர்வோர் பயிற்சி
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு 2 நாட்கள் பயிற்சி
நடைபெற்றது. இதில் கலப்பட பொருட்கள், எடைகுறைதல், பொருட்களில்
தரகட்டுப்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்ற தலைப்பில் பயிற்சி
அளிக்கப்பட்டது. பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர் வ.பவனந்தி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்
எஸ்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் மா.நரசிம்மன்
வரவேற்றார். பயிற்றுனர் எ.ஜெ.மாதவடியான், கிருஷ்ணவேனி மகளிர் சுய
உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். இம்முகாமில்
50திற்கும் மேற்ப்படோர் கலந்து கொண்டனர். முடிவில் சீ.பாஸ்கரன் நன்றி
கூறினார்.
ஒருங்கிணைப்பாளர்களுக்கு

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.