Disqus Shortname

உத்திரமேரூரில் மாற்றுதிறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் டிச,01
உத்திரமேரூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்திரமேரூர் வட்டார வள
மையத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மரங்கள் நடுவிழா மற்றும் மாணவர் பேரணி நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாற்றுதிறனாளிகள் பேரணி உத்திரமேரூர் பாலர் நேசன்
நடுநிலைப்பள்ளியிலிருந்து துவங்கிய இப்பேரணி, காவல் நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது.
நடைப்பெற்றது. இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். பேரணியில், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, மாணவர்கள் கையில் ஏந்தி, கோஷமிட்டபடி சென்றனர்.பேரணியை தொடர்ந்து, 
ஊராட்சி ஒன்றிய 1-3 நடுநிலைப்பளளி, ஊராட்சிஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பளளி மற்றும் பாலர் நேசன் நடுநிலைப்பளளி ஆகிய பள்ளி வளாகங்களில் 50திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமாபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கிரிஸ்டினாஜெபமணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஒருங்கினைப்பாளர்கள் சஞ்சீவ்குமார், வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சந்திரன், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுதந்திரசுமதி நன்றி கூறினார்.

No comments