Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

உத்திரமேரூர், டிச. 08:
 உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக செயலாளர் ஞானசேகரன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளராக ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், இன்று காலை உத்திரமேரூர் பகுதியில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை
சந்தித்து வாழ்த்து பெற்றார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.