Disqus Shortname

புத்தளி கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் நவ,29
உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தில் நேற்று மக்களை தேடி
வரும் வருவாய் திட்ட முகாம் நடைப்பெற்றது. முகாமில் காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். சேர்மென் கமலக்கண்ணன், துணைச் சேர்மென் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் வட்டாட்சியர் ரவி அனைவரையும் வரவேற்றார். முகாமில் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய
வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர்
உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட 26 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 8 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 8 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும் நிகழ்ச்சியில் 5 பயனாளிக்கு ரூ.44 ஆயிரம் திருமண உதவித்தொகையும், 3 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.38 ஆயிரம் உதவித்தொகைக்கான காசோலைகளை உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் வரதராஜீலு, அக்ரிநாகராஜன்,
திருவந்தவார்முருகன், தனி வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கிராம நிர்வாக
அலுவலர் ஜாஸ்மின் நன்றி கூறினார்.

No comments