Disqus Shortname

உத்திரமேரூரில் குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி 15ம் தேதி தொடக்கம்

காஞ்சிபுரம்,   டிச.4:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 6,55,915 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு குடும்ப அட்டைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஆனால் புதிய அட்டை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லை.
இதனால் தற்போது, பழைய குடும்ப அட்டைகளில் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த பணி 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்காக 7,11,000 உள்தாள் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப தலைவரோ அல்லது உறுப்பினர்களில் ஒருவரோ நேரில் சென்று உள்தாள் பெற்று கையொப்ப
மிட வேண்டும்.
பின்னர் குடும்ப அட்டையை மேலும் ஓராண்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments