Disqus Shortname

உத்தரமேரூர் சோழா அரிமா அரிவையர், லியோ சங்கம் இலவச மருத்துவ முகாம்

உத்தரமேரூர் செப்,21 
உத்தரமேரூர் சோழா லியோ சங்கம், மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி இளம் அரிமாக்கள் சோழா அரிவையர் சங்கம் மற்றும் உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் இணைந்து வெள்ளிக்கிழமையன்று மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி 631 மாணவ, மாணவியருக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள். லியோ ஒருங்கிணைப்பாளர் வெ.ராஜேந்திரன் வரவேற்றார். மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வரும், லியோ சங்க ஆலோசகருமான கே.ராஜா தலைமை தாங்கினார். உத்தரமேரூர் சோழா அரிமா சங்க தலைவர் கோ.காளிதாஸ், செயலாளர் தே.வீராசாமி பொருளாளர் அரசு வழக்கறிஞர் எம்.மணி முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் நிர்வாக அலுவலர் கே.பலராமன், கனராவங்கி மேலாளர் சாந்தலிங்கம் வாழ்த்தி பேசினார்கள். அரிமா சங்க சாசனதலைவர் டாக்டர் சி.சுப்பிரமணியன், டாக்டர் முகமது மொய்தீன், அரிமா சங்க மாவட்ட தலைவர் டாக்டர் கே.பரமசிவம் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை செய்தனர். மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி முதல்வர் எஸ்.சாந்தி நன்றி கூறினார்.

No comments