Disqus Shortname

பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்களுக்கு சலுகைகள் கிடைக்காது

உத்தரமேரூர் செப்,22

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால், இஸ்லாமிய மக்களுக்கு எந்தவித ஆதரவும், சலுகைகளும் கிடைக்காது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
உத்தரமேரூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மத்தியில் சமூக நல்லிணக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் பேசியது: "699 கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் முஸ்லிம்கள் இருக்க இடமின்றி அகதிகள் முகாமில் வசிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்.
குஜராத்தில் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. வன்முறையால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்றார் அவர்.
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அப்துல்வஹாப் தலைமை தாங்கினார். மாவட்டச்  செயலர் கே.எஸ்.தாவூத் வரவேற்றார்.
உத்தரமேரூர் நகர பொறுப்பாளர்கள் எஸ்.பி.சர்புதீன், ஏ.சர்புதீன், கே.பசுலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்திப் பேசினார்.
தி.மு.க. ஒன்றியச் செயலர் இரா.நாகன், உத்தரமேரூர் பேரூராட்சித் தலைவர் சுமதி குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலர் ராபர்ட் (எ) மல்லிமாறன், மாவட்டச் செயலர் சு.க.விடுதலைச்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments