Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 1403 பள்ளி மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் விழா

உத்தரமேரூர் செப்,19
உத்தரமேரூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் பயிலும் 1403 பள்ளி மாண, மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா  புதன்கிழமையன்று நடந்தது.  ஒன்றியக்குழு தலைவர்  ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, வரவேற்றார் உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர். வாலாஜாபாத். பா.கணேசன் 1403 மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கி சிப்புரையாற்றினார். மிதிவண்டிகள் ஒரக்காட்பேட்டை பள்ளிக்கு 85 சாலவாக்கம் 200 ரெட்டைமங்கலம் ஆதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி 101 உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 338 அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 177, குப்பையநல்லுார் இலயோலா பள்ளி 104, மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி 118 பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளி 191 களியாம்பூண்டி 89 மிதி வண்டிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சாலவாக்கம் ஒன்றியகுழு உறுப்பினர் வனிதாமுருகன், மாவட்ட குழு உறுப்பினர்  சுமதி குணசீலன் தண்டரை தணிகைவேல், திருவந்தவார் முருகன் அம்பிகாகோவிந்தராஜ், பி.வில்வபதி மானாம்பதி கண்டிகை லுாசியாஜேம்ஸ். உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments