Disqus Shortname

வினாடி வினா போட்டி

உத்தரமேரூர் ஆக, 31
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உத்தரமேரூர் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைப்பெற்றது, இப்போட்டியில் பல்வேறு மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இதில் இளைநிலை பிரிவு போட்டியில் அகரம்துாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடம் பெற்றனர். இதேபோல் உயர்நிலை பிரிவு போட்டியில் சர்வசேவா உயர்நிலைப்பள்ளி காட்டுகொல்லை முதலிடம் பிடித்தனர். இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் வரகுண்டபாண்டியன் தலைமை தாங்கினார். கிளை கௌரவ தலைவர் தனமுத்து முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் பழனி வரவேற்றார். மாவட்ட செயலாளர் முனுசாமி சிறப்பரையாற்றினார். கமல்கிஷேர், ரமேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினார். முடிவில் கிளை இணைசெயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.