Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை துண்டு பிரசுரங்கள் வழங்கல்

உத்தரமேரூர் செப்,15
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் புலியூர், அத்தியூர் மேல்துாளி,
அகரம்துாளி, கம்மாளம்பூண்டி ஆகிய கிராமங்களில் சனிக்கிழமையன்று தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா நடந்தது. உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத். பா.கணேசன் தலைமை தாங்கி கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு , இளைஞர் இளம் பெண்கள் பாசரை டி.சந்திரமௌலி கே.தயாளன் எம்.கே.பி.வேலு,
மேனலுார் வேலாயுதம்  எம்.ஜீ.ர்.இளைஞரணி மாவட்டச்செயலாளர் எஸ்.எஸ். ஆர்.சத்யா, புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழநி, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் பி.வில்வபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.