Disqus Shortname

வருவாய் திட்ட முகாம் ரூ.31.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர் செப்,4
     காஞ்சி மாவட்டம் உத்தரமேரூர் தாலுக்கா களியாம்பூண்டி கிராமத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் 31 லட்சத்து 53 ஆயிரத்து 590 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். களியாம்பூண்டி ஒன்றிய குழு உறுப்பினர் தங்க.பஞ்சாட்சரம் வரவேற்றார். ஊராட்சி மன்றத்தலைவர் வேலு,  முன்னிலை வகித்தார். இவ்விழாவில் காஞ்சி மாவட்ட ஆட்சி தலைவர் லி.சித்ரசேனன் கலந்து கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி 1 லட்சம். 9 நபர்களுக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்பில் வீட்டு மனைப்பட்டாக்கள் 12 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 12 நபர்களுக்கு 7 இலட்சத்து 20 ஆயிரம்  31 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை ரூ.3 லட்சத்து 72ஆயிரமும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை 12 நபர்களுக்கு உதவித் தொகை 60 ஆயிரம், தமிழ் நாடு  முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை 2 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500 திருமண உதவித்தொகை 3 நபர்களுக்கு ரூ.24 ஆயிரத்திற்கும் ஒரு முறை திட்டதின் கீழ் 14 பயனாளிகளுக்கு 15லட்சத்து 12 ஆயிரம்  மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களுக்கு உண்டான உத்தரவு பத்திரங்களை கலெக்டர் வழங்கி தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளை பாராட்டி பேசினார்.  இவ்விழாவில் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணை தலைவர் அ.ரவிசங்கர், மண்டல துணை வட்டாட்சியர் கலைமணி, காஞ்சி மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் சக்திமணி, ஆய்வாளர் ஞானவேல், பேரூராட்சி செயல்அலுவலர் ஆரோக்கியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷாராணி (கி,ஊ,)  மணிமாறன், (வ,ஊ) திருவந்தவார் முருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, பெருநகர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.விஜயக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் என்.கருணாமூர்த்தி, மானாம்பதி கண்டிகை ஊராட்சி மன்றத்தலைவர் வி.பி.ஜான், லுாசியா ஜேம்ஸ், மானாம்பதி பி.வில்வபதி, பூந்தண்டலம், ராஜேந்திரன், அ,பி,சத்திரம் ஜி.பெருமாள் நீரடி என்.பி.தினகரன், ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை, புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழநி நாஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயா நந்தன் காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குணசேகரன், களியாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், பொ.சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி நன்றி கூறினார்.  

No comments