Disqus Shortname

உத்தரமேரூர் பஸ் ஸ்டாண்டில் இன்று முதல் "அம்மா குடிநீர்' விற்பனை துவங்கப்பட்டது

 உத்தரமேரூர் செப்,16
 அம்மா குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. விடியோ கான்பரன்சிங் முறை மூலம் புதிய திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.பொது மக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று திறக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
 அதன்படி முதல்வரின் ஆணைக்கிணங்க உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் இன்று ‘அம்மா குடிநீர்’விற்பனை நிலையம்  அமைக்கப்பட்டு ஒரு லிட்டர் குடிநீர் ரூ.10-க்கு விற்பனை துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக காஞ்சி மண்டல துணை மேலாளர் (வணிகம்) வெங்கடேசன் உத்தரமேரூர் கிளை மேலாளர் இராஜசேகர் அண்ணா தொழிற் சங்க தலைவர் பி.குமார், பணி மனை செயலாளர் எம்.பச்சையப்பன் பொருளாளர் எ.கந்தன் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். களியாம்பூண்டி ஒன்றிய குழு  உறுப்பினர் தங்க.பஞ்ஞாட்சரம் ஒன்றிய குழு துவக்கி வைத்தார்.

No comments