Disqus Shortname

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கல்லுாரியில் ஐ.எ.எஸ்.ஐ.பி.எஸ். பயில இலவச பயிற்சி அளிக்கப்படும்.

உத்தரமேரூர் செப்,07
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கல்லுாரிகளில்  ஐ.எ.எஸ். ஐ.பி.எஸ். பயில
மாணவ மாணவியர்க்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். என்று அறக்கட்டளை தாளாளர் ஏ.என்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமையன்று மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி வளாக திடலில் ஆசிரியர் தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர்  கே.இராஜா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர். வி.இராஜேந்திரன் வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாண்டியன், ஆசிரியர் பயிற்சி கல்லுாரி முதல்வர் மலர்விழி முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் உத்தரமேரூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரி, ஐ.டி.ஐ,
மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கலை அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி , ஆசிரியர் பயிற்சி கல்லுாரி,  குளோபல் பள்ளி முதல்வர்களை மீனாட்சி அம்மாள்  அறக்கட்டளை தாளாளர் ஏ.என்.இராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசியது. மீனாட்சி அம்மாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி கடந்த 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதை பாராட்டினார். மேலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். படிக்க விரும்பும் இப்பகுதியில் உள்ள மாணவ மாணவியருக்கு இலவசமாக அனைத்து தர மக்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். கணினி
துறைத்தலைவர் என்.கவிராஜன் நன்றி கூறினார்

No comments