Disqus Shortname

உத்தரமேரூரில் அரசு கலை அறிவியல் கல்லுாரி திறப்பு விழா

உத்தரமேரூர் செப்,13
உத்தரமேரூரில் அரசு கலை அறிவியல் கல்லுாரி திறப்பு விழா வெள்ளிக்கிழமையன்று நடந்தது. தமிழ் துறை தலைவர் முதல்வர் (பொறுப்பு) டாக்டர்.ப.கி.கிள்ளிவளவன் அனைவரையும் வரவேற்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமையனறு கானொலி காட்சி மூலம் உத்தரமேரூர் கலை அறிவியல் கல்லுாரியை திறந்து வைத்தவுடன் காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன் உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத். பா.கணேசன் கல்லுாரி மாணவ, மாணவியர்க்கு இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரை பாராட்டி பேசினார்கள்.  இக்கல்லுாரியில் 112 மாணவர்களும், 132 மாணவிகளும் மொத்தம் 244 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இளநிலை, தமிழ் ஆங்கிலம், வணிகம், இளநிலைகணிதம், ஆங்கிலம்வழி, தமிழ்வழி, இளநிலை கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயில உள்ளனர். திருப்புலிவனத்தில் புதிய கல்லுாரிக்கான கட்டிடங்கள் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தில் இக்கல்லுாரி செயல்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். மேலும இவ்விழாவில் உத்தரமேரூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் மணிமாறன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆரோக்கியதாஸ் வட்டாட்சியர் சாவித்ரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராஜேந்திரன் ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர் அ.ரவிசங்கர். ஒன்றி கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, திருவந்தவார் முருகன், குண்ணவாக்கம், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் வனிதா முருகன் மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன் ஓ.வி.வரதன். பி.வில்வபதி, திருப்புலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர். கார்வண்ணன், ஒட்டந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி இராஜேந்திரன்  புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பி.பழநி.அ.பி.சத்திரம் ஜி.பெருமாள், களியாம்பூண்டி தங்க பஞ்சாட்சரம். வாடாதவூர் ஒன்றிய குழு உறுப்பினர். டி.எம்.சடையாண்டி, மேனலுார் வேலாயுதம், உட்பட பலர் கலந்துகொண்டனர். தனியார். பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர் 53 பேருக்குமடிகணினி கூடிய விரைவில் வழங்கப்பட உள்ளதாக கிள்ளிவளவன் தெரிவித்தார்.

No comments