Disqus Shortname

உத்தரமேரூரில் விவசாயிகள் சங்கம் இருளர் இனத்தவருக்கு வீட்டுமனை பட்டா மாற்றம் செய்ய காத்திருக்கும் போராட்டம்

உத்தரமேரூர் செப்,10
 உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமையன்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உத்தரமேரூர் வட்டம், அரசாணிமங்கலம், நாஞ்சிபுரம்,கிராமத்தில் வசிக்கும் இருளர் , பழங்குடி மக்களுக்கு வீட்டு மனை பட்டா மாற்றம் செய்ய கோரி காத்திருக்கும் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகள் சங்க வட்டச்செயலாளர் வி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். எம்.சக்ரபாணி, ஏழுமலை, முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஏ.நாகப்பன், மாவட்டத்தலைவர் கே.நேரு, மாவட்ட செயலாளர் சி.பாஸ்கரன், துணைசெயலாளர் சங்கர். வட்ட நிர்வாகிகள் எம்.எட்டியப்பன். பி.கணேசன் ,டாக்டர் த.சோழன் உட்பட இருளர் இன மக்கள் பங்கேற்றனர். உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபின் வெளியில் வந்து கலெக்டர் லி.சித்ரசேனனிடம் தங்கள் குறைகளை எடுத்து கூறினார்கள் அசேபாபிளான் நில மற்றும் சொத்துக்கள் திட்ட பொறுப்பாளர் எம்.லோகநாதன் ஆட்சியரிடம் கூறியது  அசேபா திட்டத்தின் மூலம் நாஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் 14 இருளர்களுக்கும், அரசாணிமங்கலம் கிராமத்தில் 18 இருளர்களுக்கும், காலி மனை கொடுத்து வீடும் கட்டி தந்துள்ளோம். என்றும் அவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுக்க போதிய நிதி இல்லை என்றும் தெரிவித்தார். இது தனியார்நிலம் .அரசுநிலமாக இருந்தால் நான் உதவி செய்ய காத்திருக்கிறேன் என்று கூறினார்.  கலெக்டர் அசேபா திட்டபிளான் தொகுப்பு வீடுகள் பண்னை மேலாளர் நந்தன் கலந்துகொண்டார்.  மாவட்ட ஆட்சியர் சென்றதும் காத்திருக்கும் போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

No comments