Disqus Shortname

உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லி.சித்ரசேனன் திடீர் ஆய்வு

உத்தரமேரூர் செப்,10 
உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று காஞ்சி மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் திடீர் ஆய்வு செய்தார்.  பட்டா போட்டு கொடுக்காதது. எவ்வளவு என்றும் பட்டா கொடுத்த பின் தான் பயனாளிகள் வீடு கட்ட அனுமதி வழங்க பட வேண்டும் என்று கூறினார். எந்த மனுக்கள் வாங்கும்  போதும் அனைத்து ஆவனங்களும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்த பின் தான் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் ரேஷன் கார்டு பட்டியலை எடுத்து வர சொல்லி பார்த்ததில் 77 ரேஷன் கார்டுகள் வழங்கபடாமல் நிலுவையில் உள்ளதை பார்வையிட்டு விசாரித்தார். 8 நாட்களுக்குள் பட்டா வழங்கி விடுவதாக அதிகாரிகள் கூறினார்கள். வட்டாட்சியர் சாவித்ரி, மண்டல துணை வட்டாட்சியர் கலைமைணி ஆகியோரிடம் பொது மக்களின் கோரிக்கைகளை சரிபார்த்து உடனுக்கு உடன் சான்றிதழ்கள் பட்டாக்கள், ரேஷன் கார்டுகளை வழங்கிட வேண்டும என்றும் வட்டாட்சியர், அலுவலக நுழைவு வாயிலில் அரசு விளம்பர பேனர்களை வேறு இடத்திற்கு மாற்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் லி.சித்ரசேனன் உத்தர விட்டார். தாலுக்கா அலுவலகத்தில் வந்த பொது மக்களிடமும் பெண்களிடமும் குறைகளை கேட்டறிந்து உடன் நிவர்த்தி செய்ய கூறினார்.

No comments