Disqus Shortname

புதுவாழ்வு திட்ட இலவச வேலை வாய்ப்பு முகாம்

உத்தரமேரூர் செப்,13
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் வளாகத்தில் புதன்கிழமையன்று (செப்,11)  புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.   புதுவாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் பி.தனசேகரன் தலைமை தாங்கினார். உதவிதிட்ட மேலாளர் ஆர்.சுபான் வரவேற்றார். பாலிடெக்னிக் முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். புதுவாழ்வு திட்ட மாநில வல்லுநர்கள் மேற்பார்வையில் உலக வங்கி குழுவினரும் இந்தோனேஷியா அரசு பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் விதம், நிறுவனங்களின் பங்களிப்பு இளைஞர்களின் ஆர்வம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நோக்கியா, சாம்சங் ஹீண்டாய் உட்பட 17 கம்பெனிகள் கலந்து கொண்டனர். 530 நபர்கள் நேரடி வேலை வாய்ப்புக்கும் ஒட்டுநர் பயிற்சி மற்றும் தையல் பயிற்சிக்கு 400 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 1480 கலந்துகொண்டனர். உதவி திட்ட செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

No comments