Disqus Shortname

மனநிலை பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு உத்தரமேரூர் சோழா அரிமா சங்க உதவி

உத்தரமேரூர் செப்,18
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் சார்பில் திங்கட்கிழமையன்று உத்தரமேரூர் அருகே உள்ள பள்ளியாகரம் சர்ச்சில் மனநிலை பாதிக்கப்பட்ட 120 மாணவ மாணவியருக்கு அறுசுவை உணவு மற்றும் குளியல்சோப், கோல்கேட்பிரஷ், பேஸ்ட், ரூத்பவுடர் வழங்கினார்கள். விழாவிற்கு உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத் தலைவர் கோ.காளிதாஸ் தலைமை தாங்கினார். சாசனத்தலைவர் டாக்டர். சி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் தே.வீராசாமி வரவேற்றார். அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் வழக்கறிஞர் எம்.மணி, நன்றி கூறினார். உத்தரமேரூர் ஜெயின் திருமண மண்டபத்தில் இரவு நடைபெற்ற சோழா அரிமா சங்க மாதாந்திர கூட்டத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாடுவது என்றும், உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக்கில் லியோ கிளப் மூலம் நடைபெற உள்ள இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு அரிமா சங்கத்தினர் உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments