Disqus Shortname

உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர், இடைத்தரகர் லஞ்சம் வாங்கியதற்கு லஞ்சஒழிப்பு துறையினரால் இருவர் கைது உத்தரமேரூரில் பரபரப்பு


உத்தரமேரூர் ஜன -10
        காஞ்சிமாவட்டம், உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை
வட்டாட்சியராக பணிபுரிந்தவர் செல்வம் உத்தரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட
காவனூர்புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் நலப்பணியாளர் சங்க ஒன்றிய
செயலாளர் வல்லரசு என்பவர் தனது நிலத்திற்கு சிட்டா, அடங்கல் கேட்டு
மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்த நிலையில் அம்மனு உத்தரமேரூர்
வட்டாட்சியருக்கு பரிந்துரைசெய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
]இது குறித்து
வல்லரசு உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மனுவின் நிலை
குறித்து விசாரித்தபோது அவ்வலுவலகத்தில் முன்னாள் ஆவண காப்பாளராக
பணிபுரிந்த குப்புசாமி இப்பணி நிறைவு செய்ய ரூ.4,400 தர கோரி முடிவில்
ரூ.2,200 தர முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் கையூட்டு கொடுக்க
விரும்பாத வல்லரசு காஞ்சி லஞ்சஒழிப்புதுறை அலுவலகத்தில் புகார்
அளித்தார்.  அதன்பின் காஞ்சி லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் மதிவாணன்,
ஆய்வாளர் கணேசன், சதாசிவம் ஆகியோர் ஆலோசணையின் பேரில் ரூ.2,200 ஐ
இரசாயணகலவை தடவிய பணம் கொடுக்கும்போது துணை வட்டாட்சியர் செல்வமும்,
முன்னாள் ஆவண காப்பாளர் குப்புசாமியும் கையும் களவுமாக கைது
செய்யப்பட்டனர்.   இருவரையும் செங்கற்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தப்பட்டு புழல்சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதுகுறித்து உத்தரமேரூர்
வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், இவ்விசாரணை காலை
11 மணிக்கு துவங்கி மாலை 6.15 மணிவரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments