Disqus Shortname

இடியும் நிலையில் வேளாண்மை விரிவாக்க மையம்

உத்திரமேரூர்:
சாலவாக்கத்தில் உள்ள, வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம், எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது.
சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகே, வேளாண்மை விரிவாக்க மையம் செயல்படுகிறது. சாலவாக்கம், எடமிச்சி, இடையம்புதூர், பாலேஸ்வரம், கிளக்காடி, கிடங்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள், விதைகள், பயிருக்கு தேவையான மருந்துகள், பண்ணைக் கருவிகள், விவசாய இடுபொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர்.வேளாண்மை விரிவாக்க மையம், 30 ஆண்டுகள், பழமை வாய்ந்த கட்டடத்தில் செயல்படுகிறது. கட்டடம் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும், இடியும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.இதுகுறித்து, பாலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, ராஜகோபால்
கூறியதாவது:இக்கட்டடத்தின் சுவர், அவ்வப்போது பெயர்ந்து இடிந்து விழுகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன், கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வேளாண்மைத் துறை அதிகாரி கூறுகையில், "சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிய கட்டடம் கட்டி தரும்படி கேட்டுள்ளோம்,' என்றார்.

No comments