Disqus Shortname

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தொழில் உரிமகட்டணம் உயர்வு

உத்தரமேரூர் ஜன - 3
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம். ஊராட்சி ஒன்றிய
அலுவலக வளாகத்தில் புதன்கிழமையன்று நடந்தது.  ஒன்றியக்குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் .ரவிசங்கர் முன்னிலை
வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரா.உஷாராணி(.) அனைவரையும்
வரவேற்றார்.  சிறப்பு விருந்தினர் எம்.எல்.. வாலாஜாபாத் பா.கணேசன்
சிறப்புரையாற்றினார். உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய குழு மூலம் கிராம
ஊராட்சிகளில் செயல்படுத்தபடும் அனைத்து வகையான அபாயகரமானதும்,
அருவருக்கத்தக்கதுமான தொழில்களுக்கான உரிய கட்டணத்தை உயர்த்தி மறு
நிர்ணயம் செய்வது குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதித்தனர். இக்கூட்டம்
15 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் புதிய கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இக்கட்டணம் இருமடங்கு முதல் 10 மடங்கு வரை
உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினர்
சுமதிகுணசீலன், சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் வனிதாமுருகன், வட்டார
வளமைய மேற்பார்வையாளர் இராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  துணை
வட்டார வளர்ச்சி அலுவலர் நா.மாரிச்சாமி நன்றி கூறினார்.

No comments