Disqus Shortname

மாணவியருக்கு பயிற்சி

உத்தரமேரூர் ஜன 2
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத இலவச கணினி பயிற்சி முகாம்
உத்தரமேரூரில் அண்மையில் நடந்தது.  உத்தரமேரூர் வட்டார அனைவருக்கும்
கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் நடந்த இப்பயிற்சி முகாமை வட்டார வளமைய
மேற்பார்வையாளர் .இராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கிவைத்து
பேசினார். விசூர் கிராமத்தில் செயல்படும் பாரதியார் பெண்கள் உண்டு உறைவிட
பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.  மாவட்ட கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
பயிற்சியினை பார்வையிட்டார்.

No comments