Disqus Shortname

உத்தரமேரூரில் விவசாய சாகுபடி சங்க கூட்டம்

உத்தரமேரூர் ஜன,7
உத்தரமேரூர் சக்தி திருமணமண்டபத்தில் சனிக்கிழமையன்று அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் மு,திருவேங்கடம் முன்னிலை வகித்தார் பொதுச்செயலாளர் டி.கே.குருமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு துணைச்செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். அமைப்பு செயலர் தாமல் மணி, உத்தரமேரூர் புருஷோத்தமன்ரெட்டியார் சங்க ஆலோசகர்கள் ஆர்.வி.மலையம் சம்பத், பிரேம்குமார் மாவட்ட நிர்வாகிகள் காஞ்சி வி,பாலாஜி ஜி.மருகன், குமார், குணசுந்திரி, புஷ்பவல்லி முனியம்மாள் உட்பலர் சிறப்பரையாற்றினார்கள் அவ்வமயம் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. காஞ்சி மாவட்டத்தில் உள்ள விவசாய மக்கள் உற்பத்தி செய்யும் நெல்லை விவசாயிகளை ஏமாற்றி நெல் மூட்டை எடைக்கு 77 கிலோவிற்க்கு பதிலாக அனைத்து நெல் வியாபாரிகளும் 88 கிலோ ஒரு மூட்டை என்று எடை வைத்து விவசாயிகளை கொள்ளை அடிக்கும் வியாபாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு உதவிட 77 கிலோ நெல் எடை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து  திங்களன்று காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளிக்கவும் பாலாற்றில் தடுப்பனை கட்ட வேண்டும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  பிரச்சார நடை பயணம்செல்ல வேண்டும், அரசு அறிவித்த முறையை நலத்திட்டங்கள் விவசாய மக்களுக்கு சென்று அடையாததை இச்சங்கத்தின் மூலம் வன்மையாக கண்டிக்கிறோம் மேற்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறை வேற்றப்பட்டது, முடிவில் பொருளாளர், சி,எல்,ராஜவேல் நன்றி கூறினார்.

No comments