Disqus Shortname

*உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்ட* * 1 கோடியே 69 லட்சத்தில் அடிக்கல் நாட்டி பூமிபூஜை விழா **துவக்கம் * * *

உத்தரமேரூர் ஜன-25
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்ட 1 கோடியே 69
லட்சத்தில் அடிக்கல் நாட்டி பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக
நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் எல்.சித்திரசேனன் தலைமைதாங்கினார். உத்தரமேரூர்

ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர்
முன்னிலைவகித்தனர்.  வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி அனைவரையும் வரவேற்றார்.
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 1 கோடியே 69 லட்சத்து 20 ஆயிரம்
மதிப்பில் புதியதாக கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு தமிழக கால்நடை
பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா அடிக்கல்நாட்டி பூமிபூஜை விழாவை
துவக்கிவைத்தார்.  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளரும்
வி.சோமசுந்தரம், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்,
காஞ்சி பன்னீர்செல்வம், திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், உத்தரமேரூர் கிழக்கு
மேற்கு ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, வாலாஜாபாத்
ஒன்றிய குழு பெருந்தலைவர் வரதராஜலு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் அக்ரி
நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் எ.இராஜேந்திரன், உத்தரமேரூர் வட்டாட்சியர்
கே.தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி ஒன்றிய மேலாளர் நா.மாரிச்சாமி

No comments