Disqus Shortname

மரம் வளர்ப்போம் மாபெரும் கருத்தரங்கு

உத்தரமேரூர் ஜன,27
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே இருக்கும் கைத்தண்டலம் கிராமத்தில், 27,ம் தேதியன்று ,மரம், வளர்ப்பு மாபெரும் கருத்தரங்கம், பசுமை விகடன்  பொறுப்பு  பொன்.செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
தண்ணீர் தட்டுப்பாடு, அறிவியல் மின்சாரப் பிரச்சனை, ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றை சமாளித்து, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும், என்ற நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு வந்திருந்த விவசாய வல்லுநர்களையும் விவசாயிகளையும் எழில்சோலை அறக்கட்டளை தலைவரும், காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போம் சங்கத் தலைவருமான, பா.ச.மாசிலாமணி வரவேற்றுப்பேசினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் விழாவில் பங்கேற்று சிறப்பரையாற்றினார்.
வனத்துறை மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் திட்டங்களைப் பற்றி, கூடுதல் தலைமை  முதன்மை வனப் பாதுகாவலர் இருளாண்டி மரம் வளர்ப்பு மூலம் கிடைக்கும் லாபங்களைப் பற்றி புளியங்குடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி அந்தோணிசாமியும் மரங்களுக்கான, காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஹேமமாலினியும்,மரம் வளர்ப்புக்கு நபார்டு வங்கியின் உதவிகளைப் பற்றி. காஞ்சிபுரம் மாவட்ட நபார்டு வங்கியின் மேலாளர் சோமசுந்தரமும், மரங்களின் விற்பனை வாய்ப்புகளும், அதன்  சந்தை நிலவரமும் என்ற தலைப்பில், கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்போர் சங்கத்தின் பிரச்சாரப் பிரிவு தலைவர் நாராயணசாமியும் சிறப்புரையாற்றினார். மரம் வளர்ப்புக் கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழ் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர், முடிவில் மரம் கருணாநிதி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு எழில்சோலை அறக்கட்டளை மற்றும் பசுமை விகடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

No comments